ஓட்டுப்போட எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள் என்ன?
மக்களவைத் தேர்தல் 2024 -ம் ஆண்டுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் நாளை நடக்கிறது. இந்த நிலையில், வாக்கு செலுத்துவதற்கு கொண்டு செல்ல வேண்டிய அவணங்கள் என்ன?
தேர்தல் ஆணையம் மற்றும் கட்சியினர் வீடு வீடாக வழங்கிய பூத் சிலிப்பை எடுத்துச் செல்ல வேண்டும்.
பூத் சிலிப் இல்லாதவர்கள் www.nvsp.in என்ற இணையதளத்தில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து பூத் சிலிப்பை பதிவிறக்கம் செய்யலாம்.
- பூத் சிலிப்புடன் வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.
- வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள்…
- பாஸ்போர்ட்
- ஓட்டுநர் உரிமம்
- வருமான வரி கணக்கு அட்டை
- ஆதார் அட்டை
- புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
- வங்கி அல்லது அஞ்சல் நிலைய கணக்குப் புத்தகம்
- மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் பணியாளர் அடையாள அட்டை
- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டப் பணி அட்டை
- தொழிலாளர் நல அமைச்சகத்தின் திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை
- எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு அடையாள அட்டை
- ஓட்டு சாவடி நிலை அலுவலர்களால் கையொப்பமிட்டு வழங்கப்பட்டுள்ள வாக்காளர்களின் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்பு
இந்த 11 வகையான புகைப்படத்துடன் கூடிய அசல் அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை உடன் எடுத்துச் சென்று ஓட்டு சாவடி அலுவலர்களிடம் காட்டி ஓட்டுப்போடலாம்.
எனவே, அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்.